தமிழ் திரையுலகில் சூப்பர் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். அனைவரையும் கவர்ந்த நடிகராக உள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடைசியாக அவர் நடித்த மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது நெல்சன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே ஜார்ஜியாவில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கவுள்ளது.
இதற்கிடையே விஜய்யின் 47-வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் திகதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் நடிக்கும் ‘விஜய் 65’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட உள்ளனர். விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்போதே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைத்தளத்திலும் காமன் டிபியை வைத்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வித்தியாசமான வாழ்த்தை தெரிவித்துள்ளனர் . விஜய் அரசியலுக்கு வருவதாக அடிக்கடி பேச்சு அடிப்படுகிறது. இதை வைத்து தமிழகத்தில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அந்த மாதிரியான போஸ்டர் ஒன்றை தற்போது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் ஸ்டாலின், விஜய்யிடம் செங்கோலைக் கொடுப்பது போன்று புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதோடு ‘தம்பி வா தலைமையேற்க வா ‘ என்ற வாசகம் உள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.