யாழிலும் டெல்ட்டாவா?: அடுத்த வாரம் தெரியும்!

Date:

யாழ் மாவட்டத்திலும் டெல்ட்டா வகை கோவிட்-19 வைரஸ் பரவல் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக, தெரிவு செய்யப்பட்ட மாதிரிகள் சில, மேலதிக பரிசோதனைக்காக சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தெமட்டகொட பகுதியில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் சிலரின் பிசிஆர் மாதிரிகள், மரபணு சோதனைக்காக சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் 2 வீடுகளை சேர்ந்த 5 பேருக்கு, இந்தியாவில் பரவிய டெல்ட்டா வகை திரிபடைந்த கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, வடக்கு சுகாதார பிரிவினர் அதிக வைரஸ் பரவலுள்ள இடங்களில் அடையாளம் காணும் தொற்றாளர்களின் மாதிரிகளை, மரபணு பரிசோதனைக்காக சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதலில் யாழ் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் சிலரின் மாதிரிகள், நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் பரிசோதனை முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும்.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்