நடிகர்கள் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கும் பொழுதுப்போக்கு குடும்பத் திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப்படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ளார்.
ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த எம்ஜிஆர் மகன் பட வெளியீட்டை தள்ளிப் போட வைத்தது கொரோனா ,ஏப்ரல் மாதத்தில் கொரோனா உச்சத்தை எட்ட, தமிழக அரசு பொது முடக்கத்தை அறிவித்தது. லாக்டவுன் அறிவிப்பால், எம்ஜிஆர் மகன் திரைப்பட ரிலீஸும் முடங்கியது.
இந்த திரைப்படத்தில் சத்யராஜ் அப்பாவாகவும், நடிகர் சசிகுமார் மகனாகவும் நடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து சரியான நகைச்சுவை விருந்தை கொடுத்திருப்பதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக எம்ஜிஆர் மகன் திரைப்படம், ஏப்ரல் 23-ம் திகதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா பாதிப்பால், திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட காலகட்டம் அது. அப்போது, 50 சதவீத பார்வையாளர்கள், 100 சதவீத என்டர்டெயின்மெண்ட் என விளம்பரப்படுத்திய தயாரிப்பு நிறுவனம் ஏப்ரல் 23ஆம் திகதியன்று திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் கொரோனா தாக்கம் உச்சகட்டத்தை அடைய, லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பட வெளியீடு தள்ளிப் போனது.
சசிகுமார் நீண்ட காலமாக ஒரு ஹிட் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவரது எதிர்பார்ப்பை எம்.ஜி.ஆர் மகன் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை படத்தின் டிரெய்லர் ஏற்படுத்துகிறது. “யு” சான்றிதழ் பெற்ற இந்தப் படம், அனைத்து வகையான பார்வையாளர்களையும் ஈர்க்கும்.