கிரகங்களின் அமைப்பைப் பொறுத்து ஒருவரின் ராசி மற்றும் அதற்கான குண நலன்கள் அமைகின்றன. அந்த வகையில் இல்லற வாழ்வில் கணவருக்கு ஆளுமை, அன்பு செலுத்துதல், கணவரின் விருப்பங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு என பல விஷயங்களில் ஆதரவாக இருக்கக்கூடிய மனைவி அமைவது மிகச்சிறப்பானது.
ஒரு கணவனுக்கு எந்த ராசியினர் சிறந்த மனைவியாக அமையக்கூடிய குணங்கள் நிறைந்திருக்கும் என்பதைப் பார்ப்போம்.
கடகம்
சந்திரன் ஆளக்கூடிய கடக ராசி பெண்கள் ஒரு புதையல் போன்றவர்கள். இவர்கள் மிகவும் விசுவாசமுள்ளவர்கள், அக்கறையுள்ளவர்கள், குறிப்பாக எந்த ஒரு பெரிய மோசமான நிகழ்வு ஏற்பட்டாலும், ஒருபோதும் உங்களை விட்டு பிரிய மாட்டார்கள்.
மீனம்
மீன ராசியை சேர்ந்த பெண்கள் இயற்கையிலேயே மிகவும் பொறுமையானவர்கள். மிகவும் பொறுப்பானவர்கள். இவர்கள் தங்களின் துணையை மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் வைத்திருப்பார்கள். இவர்கள் மிகவும் விசுவாசமான மற்றும் நகைச்சுவையானவர்கள்.
துலாம்
துலாம் ராசியினர் எந்த ஒரு நல்ல தருணத்தையும் தவறவிடுவது கடினம். இவர்கள் தங்கள் கணவனை முழு மனதுடன் நேசிப்பார்கள். வாழ்க்கையில் எந்த ஒரு மோசமான நிலையையும் தன் துணைக்காக சமாளிக்கக்கூடியவர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் மனைவியாக அமைந்தால், அவர்கள் தங்கள் துணைக்கு எப்போதும் சிறந்ததை செய்வார்கள். தங்கள் துணைக்கு பக்கபலமாக இருக்க எந்த ஒரு சூழலையும் சமாளிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.