26.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
உலகம்

உலகில் தினமும் 16 மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்கள் உள்ள நாடுகள் எது தெரியுமா?

நீங்கள் எங்காவது வேலை பார்த்துக்கொண்டிருந்தால் உங்களுகு்க நிச்சயம் வேலை நேரம் பற்றி தெரிந்திருக்கும். இந்தியாவை பொறுத்தவரை 8 மணி நேரம் என்பது ஒரு பணியாளர்களின் வேலை நேரம். ஆனால் ஒவ்வொரு நாட்டிற்குள் வேலை நேரம் என்பது மாறுபடும். பல நாடுகளில் பணியாளர்களிடம் அதிக நேரம் வேலை வாங்கப்படுகிறது. ஒரு நாளுக்கு 16 மணி நேரம் வேலை நேரமாக கொண்ட நாடுகள் எல்லாம் இருக்கின்றன. சில நாடுகளில் இந்த வேலை நேரத்தைகுறைக்க பல போரட்டங்கள் நடந்தும் எதுவும் மாறவில்லை. இப்படியாக அதிக வேலை நேரம் கொண்ட நாடுகளை பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

​சீனா

சீனாவில் உலக அளவில் உள்ள சராசரி வேலை நேரத்தை விட அதிக நேரம் பணியாளர்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். இங்கு ஒரு வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை நாட்கள், ஒரு நாளுக்கு 12 மணிநேரம் வேலை நேரமாக கருதப்படுகிறது. இந்த நாட்டில் உள்ள இளைஞர்கள் பலர் இந்த 12 மணி நேர வேலை சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். ஆனால் அரசு அதற்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது.

​காஸ்டா ரிச்சா / தென் கொரியா

அமெரிக்காவின் மத்திய பகுதியில் இருக்கிறது காஸ்டா ரிச்சா என்ற பகுதி உள்ளது. அங்கு ஆண்டிற்கு 2060 மணி நேரம் ஒரு நபர் வேலை செய்ய வேண்டும் என சட்டம் உள்ளது. தென்கொரியாவிலும் இதே போன்ற சட்டங்கள் இருந்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக மக்கள் போராடிய பின்பு இது வாரம் 52 மணி நேரமாக மாறிவிட்டது. இந்த வேலை நேரம் தினமும் இவ்வளவு தான் இருக்க வேண்டும் என கணகில்லாததால் பலர் இதில் கொடுமைபடுத்தப்பட்டனர்.

​இந்தியா

இந்தியாவிலும் மனிதர்கள் அதிகமான நேரம் வேலை பார்க்கின்றனர். தேசிய அளவில் நடந்த ஒரு சர்வேயில் சராசரியாக நகர் பகுதிகளில் ஒரு மனிதன் வாரம் 53-54 மணி நேரமும், கிராமப்பபுறங்களில் 46-47 மணி நேரமும் வேலை செய்கிறான். இதுவும் உலக அளவில் அதிக நேரம் வேலை செய்யும் நாடுகளுக்கு இணையானது தான்.

​ரஷ்யா

ரஷ்யாவில் ஒரு மனிதன் ஒரு வாரத்திற்கு 40 மணிநேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதே நேரத்தில் எக்காரணத்தை கொண்டு 50 மணி நேரத்திற்கும் அதிகமாக ஒருவர் பணியாற்ற கூடாது என்ற சட்டமும் உள்ளது. ரஷ்யாவில் பெரும்பாலானோர் ஓர்க் பிரம் ஹோம் என வீட்டிலிருந்தே வேலைபார்க்கும் முறையில் பணியாற்றுகின்றனர்.

​ஜப்பான்

ஜப்பான் நாட்டின் மக்கள் இயற்கையிலேயே அதிக நேரம் உழைக்கும் திறனுடையவர்கள். இந்நாட்டில் உள்ள மக்கள் பெரும்பாலும் ஒரு நாளுக்கு 16 மணி நேரம் உழைக்கிறார்கள். இங்குள்ள தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. அது தவிர மக்கள் வேறு எதற்கு விடுமுறை எடுப்பதில்லை. இங்குள்ள அரசாங்கம் மக்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்கிறது. அதனால் மக்கள் தங்கள் ஸ்டிரெஸ் குறைய பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களின் தயாரிப்பு திறன் அதிகரிக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரஷ்ய அணுசக்தி படைகளின் தளபதி குண்டுவெடிப்பில் பலி

Pagetamil

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

420Kg நபரின் இறுதிச்சடங்கிற்கு உதவிய தீயணைப்புத்துறை!

Pagetamil

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஈரானின் ஏவுகணை எரிபொருள் உற்பத்தியை குறைத்த இஸ்ரேல் தாக்குதல்

Pagetamil

Leave a Comment