தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக தொடர்ந்து கோலோச்சி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்தது. இதையடுத்து சென்னை திரும்பிய ரஜினி சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்து விட்டார். அதனால் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் இப்படத்தின் ரிலீஸ் திட்டமிட்டபடி தீபாவளியையொட்டி வெளியாவது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே மருத்துவ சிகிச்சைக்காக ரஜினி அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக தனி விமானம் மூலம் குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார் ரஜினி. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்துக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ரஜினியே மத்திய அமைச்சர்களிடம் நேரடியாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினி அமெரிக்கா செல்ல மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியது.
#Rajinikanth | மருத்துவ பரிசோதனைக்காக தலைவர் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டார். #Superstar Rajinikanth.
Return Stronger than Ever #Thalaivaa ❤️#Thalaivar #Annaatthe@RangarajPandeyR @MaridhasAnswers @RIAZtheboss @mayavarathaan @itisprashanth @rameshlaus pic.twitter.com/E2u3PEPxZN
— Rajinikanth Fans (@Rajni_FC) June 19, 2021
இந்நிலையில் 14 பேர் வரை பயணிக்கும் வசதி கொண்ட சிறப்பு தனி விமானம் மூலம் ரஜினியும் அவரது குடும்பத்தினரும் இன்று அமெரிக்கா சென்றனர். அமெரிக்காவில் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளும் ரஜினி, சிறிது காலம் அங்கு ஓய்வெடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அவரது மருமகன் தனுஷும், மகள் ஐஸ்வர்யாவும் அமெரிக்காவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.