29.8 C
Jaffna
March 29, 2024
லைவ் ஸ்டைல்

ராத்திரி பாட்டு கேட்டபடி தூங்கக்கூடாது; காரணம் தெரியுமா!

இசை எப்போதும் நம்மை அமைதிப்படுத்தி, புத்துணர்வாக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், பலரும் தங்கள் தூக்கத்துக்கு பாடல் உதவும் என்று படுக்கையிலே பாடலைக் கேட்டுக் கொண்டு தான் தூங்குவர். இது உங்கள் தூக்கத்தை உண்மையிலே பாதிக்குமா…? ஆம் படுக்கைக்கு முன்னோ அல்லது படுக்கையிலோ நாம் பாடல் கேட்பது நமது தூக்கத்துக்கு இடையூறாக இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.

இதுகுறித்த ஆய்வில், ஒருவர் தூங்கச் செல்லும் முன் கேட்கும் பாடல் அவர் மூளையில் பதிவாகி விடும். அவர் தூங்கி விட்டால் கூட அந்த பாடல் உங்கள் மூளையில் செயல்பாட்டிலே இருக்கும். அதாவது உங்கள் மூளை அந்தப் பாடலில் தான் நிற்கும். குறிப்பாக, அடிக்கடி நள்ளிரவில் எழுபவர்களுக்கு அவர்கள் இரவில் கேட்ட பாடலே ஓடிக்கொண்டிருப்பது போன்று தோன்றும். இதனால் உங்களின் ஆழந்த உறக்கம் பாதிக்கப்படும்.

இந்த ஆய்வு இசை மற்றும் தூக்கம் இவை இரண்டுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்தது. ஒரு பாடல் தூங்குவதற்கு முன் கேட்டால் அது நம் மனதில் மீண்டும் மீண்டும் காதருகினில் கேட்பது போன்றே இருக்கும். இவை பொதுவாக விழித்திருக்கும் போது நிகழ்கின்றன என்று நமக்குத் தெரியும். ஆனால் தூங்க முயற்சிக்கும் போது கூட இது போன்று நிகழக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

​தூங்கினாலும் மூளையில் ஓடும் இசை

இதுகுறித்து பேய்லர் பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் அறிவியல் பேராசிரியரும், தூக்க ஆராய்ச்சியாளருமான மைக்கேல் ஸ்கல்லின் கூறுகையில், பாடல் மற்றும் இசை கேட்பது நன்றாக இருக்கும் என நம் அனைவருக்கும் தெரியும். தற்போதைய இளைஞர்கள் வழக்கமாக படுக்கைக்கு செல்வதற்கு முன் தங்களது படுக்கைக்கு அருகிலே பாடலை வைத்து கேட்டுக் கொண்டு உள்ளனர். நீங்கள் இசையை எவ்வளவு அதிகமாகக் கேட்கிறீர்களோ, அந்த அளவு உங்களின் தூக்கம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்.

​தூக்கம் கெடும்

பொதுவாக இசை அல்லது பாட்டின் ஒலி திரும்பத் திரும்ப காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வை காதுப்புழு என்பர். உதாரணமாக நாம் காலை எழுந்தவுடன் கேட்கும் பாடலை, நாம் அன்று முழுவதும் முணுமுணுத்துக் கொண்டிருப்போம் அல்லவா… அது தான் காதுப்புழு. இரவில் தவறாமல் காதுப் புழுக்களை அனுபவிக்கும் நபர்களை, வாரத்திற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை காதுப் புழுக்களை அரிதாக அனுபவிக்கும் நபர்களுடன் ஒப்பிடும் போது, பாடல் கேட்டு உறங்குபவரின் தூக்கத்தின் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

​இரவு நேர இசை

இதுகுறித்த, ஆய்வில் 209 பேர் பங்கேற்றனர். இதில், தூங்க முயற்சிக்கும் போது ஒருவர் எத்தனை முறை காதுப் புழுவை அனுபவிக்கின்றனர் என்று கணக்கிடப்பட்டது. அதேபோல் தூங்கினாலும் நம் மூளையில் நாம் கேட்கும் பாடல் கேட்டுக் கொண்டே இருக்கும் என்பதும் அறியப்பட்டது. நாம் தூங்கினாலும் மூளையில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பதாகும். அதபோல் அந்த காதுப் புழு எனப்படும் ஒரு பாடலின் வரியோ அல்லது ஒரு பகுதியோ தூங்கி எழுந்திருக்கும் போதும் இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதையும் கண்டறிந்துள்ளார்.

​ஆழ்ந்த தூக்கமின்மை

மேலும், இசை கேட்டுக் கொண்டே தூங்குவது அவர்களின் தூக்கத்தை மேம்படுத்துவதாகத் தான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அதிகமான இசையைக் கேட்பவர்கள் மோசமாக தூங்குவதை பெறுவதை நாங்கள் கண்கூடாகக் கண்டோம் என்றும் ஆய்வாளர் ஸ்கல்லின் கூறுகிறார். அதிக இசை கேட்கும் பழக்கம் கொண்டவர்கள் தொடர்ச்சியான காதுப் புழுக்களையும், தூக்கத்தின் தரத்திலும் சரிவை அனுபவித்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பல சுகாதார அமைப்புகளும் படுக்கைக்கு முன் அமைதியான இசையைக் கேட்க பரிந்துரை செய்கின்றன. ஆனால், தூங்குவதற்கு முன் இசை நிறுத்தப்பட்ட பின்னரும் கூட, தூங்கும் மூளை தொடர்ந்து பல மணி நேரங்களுக்கு இசையை செயலாக்குகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment