நடிகை பிரியாமணி ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படப்பிடிப்பில் ஷாருக்கான் தனக்கு 300 ரூபாய் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்
நடிகை பிரியாமணி கடைசியாக தி பேமிலி மேன் சீரிஸில் நடித்து இந்திய அளவில் பிரபலம் ஆகியுள்ளார். அதையடுத்து மீண்டும் அவரது மார்க்கெட் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ப்ரியாமணி, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான் உடன் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.
ஷாருக் கான் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பிரியாமணி ஒரு ஐட்டம் சாங் ஆடியிருந்தார். “நாங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போது ஷாருக்கானின் ஐபேடில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி விளையாட்டு விளையாடினோம். அப்போது ஷாருக் கான் எனக்கு 300 ரூபாய் அளித்தார். அவருடைய நியாபகமாக அதை இன்னும் என்னுடைய பர்சில் பத்திரமாக வைத்துள்ளேன்.
அந்தப் பாடலுக்காக ஐந்து இரவுகள் நாங்கள் படப்பிடிப்பு செய்தோம். அது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவர் என்றும் அந்த வெற்றியை தனது தலையில் ஏற்றியதில்லை. அதனால்தான் அவர் பாலிவுட்டின் பாஷா என்று அழைக்கப்படுகிறார்.நான் ஷாருக்கானுடன் பணி செய்யும் போது மிகவும் சௌகரியமாக உணர்ந்தேன். ஏனென்றால் அவர் அனைவரையும் நன்றாக கவனித்துக் கொள்வார்.” என்றுதெரிவித்துள்ளார்.
ப்ரியாமணி தற்போது தெலுங்கில் ராணா டகுபதி உடன் ‘விரத பர்வம்’ படத்தில் நடித்து வருகிறார்.




