ஜப்பானில் உள்ள 187 அடி உயர பெண் புத்தர் சிலைக்கு 35 கிலோவில் மாஸ்க் தயாரித்து அணிவித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்த முழு விபரத்தை கீழே செய்தியாக படியுங்கள்.
ஜப்பானில் உள்ள மிகப்பெரிய புத்தர் சிலைக்கு மிகப்பெரியா மாஸ்க் அணிவித்து கொரோனாவை விரட்ட பிரார்த்தனை நடந்தது.
ஜப்பானில் ஃபுகுஹிமா ப்ரீபெக்சுவர் என்ற இடத்தில் ஒரு புத்த மத கோவில் உள்ள அங்கு சுமார் 187 அடி உயரத்தில் கையில் குழந்தையுடன் இருக்கும் பெண்புத்தர் சிலை ஒன்று உள்ளது. அந்நாட்டு மக்கள் குழந்தை பிறப்பின் போது பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இந்த புத்தர் கோவிலுக்கு வந்து செல்வதை நம்பிக்கையாக வைத்துள்ளனர். இந்த சிலைக்கு 4.1 மீட்டருக்கு 5.3 மீட்டர் என்ற அளவில் சுமார் 35 கிலோ எடை கொண்ட மாஸ்க் ஒன்றை தயாரித்து அணிவித்துள்ளனர்.
இதன் மூலம் இந்த உலகம் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்து வருகிறனர். இது குறித்து டாகோமி என்பவர் கூறும் போது ” இந்த மாஸ்க்கை தயார் செய்து அதை மேலே ஏற்றுவதற்கு மட்டும் 4 ஊழியர்கள் 3 மணி நேரம் வேலை செய்தனர். ” என கூறினார்.