26.4 C
Jaffna
March 29, 2024
உலகம்

ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்!

போர்ச்சுகல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ-குட்டரெஸ் (72) கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் திகதிமுதல் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் நடந்தது.

சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொது செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2026-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் திகதி வரை தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment