யாழ் மாவட்ட நாடாளுமன்ற ஆசன எண்ணிக்கை 6ஆக குறைக்கப்பட்டது!

Date:

யாழ் மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் அடிப்படையில், வாக்காளர்களால் தெரிவு செய்யப்படக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க, நேற்று தேர்தல்கள் ஆணைக்குழு கூடியது.

இதில், யாழ் மாவட்ட 2020ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி நாடாளுமன்ற ஆசனமொன்றை குறைக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, யாழ் மாவட்டத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகும் நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆசனம், வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 18 உறுப்பினர்கள் தெரிவாகும் நிலையில், அந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்