சினிமா

‘தி ஃபேமிலி மேன்’ 3வது சீசனில் விஜய் சேதுபதி.. சர்ச்சை வெப் தொடரில் நடிப்பாரா ?

சமீபகாலமாக வெப் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடர் இந்தியா முழுவதும் அதிக கவனம் பெற்றுள்ளது. அமேசானில் வெளியான இந்த தொடரில் பிரதமரை கொள்ளும் தீவிரவாதியை இந்திய உளவு அமைப்பை ஹீரோ எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. இந்த தொடரை ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்கியுள்ளனர்.

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் சமந்தா இலங்கை தமிழ் பெண் தீவிரவாதியாக நடித்திருந்தார். இதனால் தமிழகத்தில் இந்த வெப் தொடருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த தொடரின் முதல் சீசனின் படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடைபெற்றது. அப்போது இந்த தொடரின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே, நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் விஜய் சேதுபதி சந்தித்துள்ளனர். அப்போது இரண்டாவது சீசனில் இலங்கை போராளி குழு தலைவர் பாஸ்கரன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அணுகியதாகவும், ஆனால் அதை விஜய் சேதுபதி மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக மைம் கோபியை சிபாரிசு செய்துள்ளார். இந்நிலையில் மீண்டும் இந்த வெப் தொடரின் இயக்குனர்கள், விஜய் சேதுபதி சந்தித்து மூன்றாவது சீசனில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் சர்ச்சை வெப் தொடரில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இவன் தான் என் மகன்: வீடியோ மூலம் அறிமுகம் செய்து வைத்த வரலட்சுமி சரத்குமார்!

divya divya

டப்பிங் கலைஞர் தற்கொலை: அதை பார்த்து தூக்குப் போட்டுக் கொண்ட காதலர்!

divya divya

வாரிசு நடிகருக்கு வில்லனாகும் மம்முட்டி!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!