மட்டக்களப்பு, கிரானில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரான், கோராவெளி பகுதியில் நேற்று (17) இந்த அனர்த்தம் இடம்பெற்றது. 16 வயதான மாணவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற சிறுவனே நீரில் மூழ்கி காணாமல் போனார். இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டது.
நேற்று குளித்து விட்டு, தோணியில் இரண்டு சிறுவர்கள் சென்ற போது, காற்று காரணமாக தோணியை கையாள முடியாத நிலையில், கரையேறுவதற்காக இரண்டு சிறுவர்கள் குளத்தில் குதித்துள்ளனர்.
இதில் நீச்சல் தெரிந்த சிறுவன் கரையேறினார். மற்றைய சிறுவனிற்கு நீச்சல் தெரியாது. அவர் மூழ்கினார்.
இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1