இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற ஜெனரலும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான ஜெனரல் சிறில் ரணதுங்க நேற்று காலமானார்.
இலங்கை இராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த சிறில் ரணதுங்க 1988 இல் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இலங்கை இராணுவ வரலாற்றில் இராணுவத் தளபதி பதவியை வகிக்காமல் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட ஒரே அதிகாரி இவர் ஆவார்.
இராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், இலங்கை இராணுவ வரலாற்றில் முதலாவது கூட்டுப்படை படை கட்டளை தளபதியாக பதவியேற்றார்.
அவர் 1930 பெப்ரவரி 19 இல் பிறந்தார். 1950 ல் இலங்கை இராணுவத்தில் சேர்ந்தார், 1988 இல் ஓய்வு பெற்றார்.
1990 களில் அவுஸ்திரேலியா மற்றும் பிரிட்டனுக்கான உயர் ஸ்தானிகராகவும் பணியாற்றினார்.
கண்டி சென்ட் சில்வெஸ்டர் கல்லூரியின் பழைய மாணவர், அவர் தனது பாடசாலை நாட்களில் ஹொக்கி வீரராவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1