சன் டிவி சீரியலில் நடிக்கும் அஜித் பட ஹீரோயின்!

Date:

அஜித்தின் வரலாறு படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த கனிகா தற்போது சன் டிவியின் சீரியல் ஒன்றில் அறிமுகம் ஆக இருக்கிறார்.

தல அஜித் நடித்த வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கனிகா. அவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பல டாப் ஹீரோக்கள் உடன் நடித்து இருக்கிறார். மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் படம் மூலமாக தான் கனிகா சினிமாவுக்குள் வந்தார். அதன் பின் ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கனிகாவை திரையில் பார்த்தே நீண்ட காலம் ஆகிவிட்டது என ரசிகர்கள் சொல்லி வரும் இந்த வேளையில் அவர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வந்தது.

இந்நிலையில் கனிகா சீரியலில் களமிறங்கி இருக்கிறார். அவர் சன் டிவி தொடங்க இருக்கும் ஒரு புது சீரியலில் நடிக்க இருக்கிறார். கோலங்கள் சீரியல் புகழ் திருச்செல்வம் அடுத்து இயக்கும் புது சீரியலில் தான் கனிகா முக்கிய ரோலில் நடிப்பதாக தெரிகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் அந்த சீரியல் என்ன, கதை என்ன என்பது தெரியவரும்.

spot_imgspot_img

More like this
Related

தென்னக்கோன் உள்ளிட்ட 9 பொலிஸ்காரர்களிற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக,...

ஊரான் வீட்டு பணத்தில் ஸ்வீட் சாப்பிட்ட மஹிந்த குடும்பம்: நீதிமன்றத்தில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் மகளிர் பிரிவில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை...

காதலியின் புகைப்படத்தின் முன்பாக… 19 வயது மாணவன் எடுத்த விபரீத முடிவு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்