வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களை கேட்டால் அது செய்யும் சேட்டைகளை பார்த்து ரசிக்க எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்பது தெரியும். இந்த சேட்டைகளை எல்லாம் வீடியோவாக எடுத்து பலர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இப்படியாக வெளியான வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மக்கள் பலர் இந்த வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர்.
ட்விட்டரில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில சைபீரியஸ் ஹஸ்கி ரக நாய் ஒன்று தண்ணீரில் படுத்து கொண்டு தன் மூக்கையும் வாகையும் தண்ணீருக்குள் விட்டு முட்டை விடுகிறது. சிறுவயதில் ஆற்றிலோ கிணற்றிலோ குளிக்க செல்லும் போது நாம் இப்படி எல்லாம் சேட்டை செய்திருப்போம். தற்போது இந்த நாய் அதை செய்வதை பார்க்கும் போது ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பான இந்த அனுபவங்கள் தற்போது 90ஸ் கிட்ஸ்களாக இருப்பவர்களுக்கு நன்கு அனுபவமாக இருக்கும்.
Chillin’ like a villain. 😑😎 pic.twitter.com/TPDQfIT0wT
— Fred Schultz (@fred035schultz) June 15, 2021
தற்போது இந்த வீடியோ சுமார் 60 ஆயிரம் வியூஸ்களையும, நூற்றுக்கணக்கான லைக்களையும் பெற்றுள்ளது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து கருத்திட்டு வருகின்றனர்