24.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இந்தியா உலகம்

இந்தியரை கடவுளாக வழிபடும் ஜப்பானியர்கள்… யார் இவர்?

இந்தியாவில் நீதிபதியாக இருந்த ஒருவரை ஜப்பான் நாட்டு மக்கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மையில் அப்படி ஒருவர் இருக்கிறார் அவரை பற்றி தான் காணப்போறோம் வாருங்கள் காணலாம்.

ராதாபினோத் பால் இந்த பெயரை பலரும் கேள்விபட்டிருக்க வாய்ப்பு இல்லை. வெகு சிலருக்கு தான் இவரை பற்றி தெரிந்திருக்கும். பல இந்தியர்களுக்கு இவர் யார் என்றே தெரியாது. ஆனால் ஜப்பான் மக்களுக்கு இவரை நன்றாக தெரியும். இவரை கடவுளாக அந்நாட்டு மக்கள் வணங்குகிறார்கள். இவரது நினைவாக ஜப்பானின் யாஷூகுனி பகுதியில் உள்ள கோவிலிலும், கியோடோ பகுதியில் உள்ள ரியோஸேன் கோகோகு கோவிலிலும் இவருக்காக சிலையே வைத்துள்ளனர்.

இவர் 1886ம் ஆண்டு ஜனவரி 27ம் திகதி வங்காள பகுதியில் பிறந்தவர். இவர் இந்தியாவிலும் சர்வதேச அரங்கிலும் நீதிபதியாக இருந்தவர். இவர் கொல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியில் சட்டம் படித்தவர். அதன் பின் 1923 முதல் 1936 வரை அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். 1941ம் ஆண்டு இவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் அரசிற்கு அலோசகராகவும் இருந்தார்.

​இந்நிலையில் இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு இவர் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக மாறினார். அப்பொழுது இவர் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஜப்பானில் நடந்த போர் குற்றங்களுக்காக இந்தியாவின் சார்பில் ஆஜரானார். இவரை அந்த பதிவியில் பிரிட்டிஷ் அரசாங்கம் சுதந்திரதிற்கு முன்பு நியமித்தது.

​இந்த வழக்கை இவருடன் சேர்த்து மொத்தம் 11 நீதிபதிகள் விசாரித்தனர். அவர் இவர் மட்டும் தான் ஜப்பானியர்கள் அப்பாவிகள் அவர்கள் போர் குற்றத்தில் ஈடுபடவில்லை என தீர்பளித்தார். இதில் ஜப்பானிய பிரதமர் ஹித்தேகி டோஜோ முற்றம் 20க்கும் அதிகமான தலைவர்கள் மற்றும் மிலிட்டரி அதிகாரிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

​அவர் தனது தீர்ப்பில் ஒரு சம்பவம் நடந்த பின்பு அதன் தாக்கத்தால் சட்டம் இயற்றப்பெற்று அதை வைத்து அந்த சம்பவத்தை செய்தவர்களை குற்றவாளிகளாக கருத முடியாது அதனால் போர் குற்றவாளிகளை எல்லாம் விடுதலை செய்யவேண்டும் என தீர்ப்பு எழுதினார். ஆனால் இது அடுத்த கட்ட விசாரணைக்கு சென்ற போது குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைத்தது.

​இருந்தாலும் ராதாபினோத்பாலின் தீர்ப்பு என்பது ஜப்பானிய மக்களை கவர்ந்தது. மக்களை அவரை கொண்டாடதுவங்கினர். பலர் அவரை தெய்வமாகவே வழிபட்டனர். இதனால் ராதாபினோத் பாலின் மதிப்பு ஜப்பானிய மக்களிடம் அதிகமாகி அவர் ஜப்பான் முழுவதும் பிரபலமானார். மக்களை அவரை கடவுளாக வணங்க துவங்கினர்.

2007ம் ஆண்டு ஜப்பானின் பிரதமராக இருந்த அபே இந்தியா வந்த போது அவர் ராதாபினோத்தின் மகனை நேரில் சந்தித்து மரியாதை செய்தார். அவரின் தந்தை குறித்த புகைப்படங்களையும், நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். ஜப்பானிய மக்கள் கடவுளாக ஒரு இந்தியரை ஏற்றுக்கொண்ட விஷயம் பலருக்கு தெரியாது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

Leave a Comment