நடிகை ராஷி கண்ணா ஊரடங்கள் வாழ்வாதாரம் இழந்த 1200 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை நாட்டையே உலுக்கியுள்ளது. இன்னும் அதன் சீற்றம் குறைந்தபாடில்லை. கொரோனாவால் மக்கள் ஒரு பக்கம் பாதிக்கப்பட மற்றொரு பக்கம் ஊரடங்கு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது.
எனவே அரசு நிவாரணங்கள் அளித்து மக்கள் துயரைப் போக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் வசதி படைத்தவர்கள் பலரும் முன்வந்து உதவிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக திரைத்துறை பிரபலங்கள் பலர் இந்த இக்கட்டான சூழலில் பலருக்கு உதவி வருகின்றனர்.
தற்போது நடிகை ராஷி கண்ணா இரு நிறுவனங்களுடன் இணைந்து ஹைதராபாத்தில் சுமார் 1200 பேருக்கு உணவளித்து உதவியுள்ளார். அதையடுத்து பலரும் ராஷி கண்ணாவை பாராட்டி வருகின்றனர்.
ராஷி கண்ணா தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரண்மனை 3’ படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் ராஷி கண்ணா பிஸியான நடிகையாக மாறி வருவது குறிபிடத்தக்கது.