26.4 C
Jaffna
January 11, 2025
Pagetamil
உலகம்

சீனப் பெருஞ்சுவர் ஏன் “உலகின் மிகப்பெரிய கல்லறை” என அழைக்கப்படுகிறது தெரியுமா?

சீனப்பெருஞ்சுவரை பற்றி இந்த உலகில் தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு இந்த இடம் மிகவும், பிரபலம் ஆண்டுதோறும் இந்த சீனப்பெருஞ்சுவரை பார்வையிடுவதற்கு மட்டும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த சீனப்பெருஞ்சுவர் உலகின் 7 அதிசயங்களில் இதுவும் ஒன்று. இந்த சீனப்பெருஞ்சுவரை விண்வெளியிலிருந்து பார்த்தாலும் தெரிவதாக சிலர் சொல்லுகிறார்கள் அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இந்த சீனப்பெருஞ்சுவர் சுமார் 400 ஆண்டுகள் தொடர்ந்து கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இது கட்டிப்பட்டதாக தெரிகிறது. இதை சீனாவின் முதல் மன்னராக கருதப்படும் குயின் ஸி ஹூவாங் என்பவரால் கட்ட திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டதாக தெரிகிறது.

அவர் இறந்து சில நூறு ஆண்டுகளுக்கு பின்பே இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 5ம் நூற்றாண்டில் இது கட்ட துவங்கப்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது. இந்த இடத்தை உலகின் மிகப்பெரிய கல்லறை என்றும் கருதுகிறார்கள் அது பற்றி உங்களுக்கு தெரியுமா?

சீன பெருஞ்சுவர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. 2009ம் ஆண்டு இந்த சீனப்பெருஞ்சுவரை முற்றிலுமாக அளந்து பார்க்கும் சர்வே நடந்தது. அப்பொழுது இது சுமார் 8850 கிலோ மீட்டர் நீலம் கொண்டது என சொல்லப்பட்டது. ஆனால் 2012ம் ஆண்டுநடந்த சர்வேயில் இது 21,196 நீளம் கொண்டதாக சொல்லப்பட்டள்ளது. இது இரண்டும் ஒன்றிற்கு ஒன்று முரணமாக உள்ளது.

இந்த சுவர் சீனாவை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. சிலர் போதி தர்மர் இந்த வழியாக தான் வந்தார். அவரை தேடி வருபவர்களை உள்ளே வரவிடாமல் தடுக்க இதை செய்ததாக கூறுகின்றனர். ஆனால் 1211களில் முகல் பேரரசன் செங்கீஸ் கான் இந்த சீனப்பெருஞ்சுவரை உடைத்து சீனாவை தாக்கியுள்ளான்.

இந்த சீன பெருஞ்சுவரை சீன மொழியில் “வான் லீ சங் சங்” என குறிப்பிடுகின்றனர். இதற்கு சீனப்பெருஞ்சுமாரின் அகலம் 5 குதிரைகள் அல்லது 10 வீரர்கள் நடந்து செல்லும் அளவிலானது என பொருள் எனகூறுகின்றனர். இந்த இடம் யுனஸ்கோவில் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

​உண்மை என்ன?

இந்த சுவரை கட்டும் பணியில் சுமார் 20 லட்சம் பேர் ஈடுபட்டதாகவும் அவர்களில் 10 லட்சம் பேர் அங்கேயே இறந்துவிட்டதாகவும், இறந்தவர்களை இந்த சுவற்றின் அடியிலேயே புதைத்துவிட்டதாகவும் செய்திகள் உள்ளன. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அதனால் தான் இந்த இடம் உலகின் மிகப்பெரிய கல்லறை என்றும் சிலர் சொல்லுகிறார்கள். உண்மையில் இது எந்த அளவிற்கு உண்மை என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ட்ரம்பின் பதவியேற்புக்கு கூகுள், போயிங் மில்லியன் டொலர் நன்கொடை

east tamil

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு!

Pagetamil

நியூயோர்க்கில் பெரும் தீ – 7 பேர் காயம், உயிர்காக்கும் போராட்டத்தில் 200 வீரர்கள்

east tamil

போப் ஆண்டவர் உடல் நலக்குறைவு: உரையை வாசித்த உதவியாளர்

east tamil

ஜெட் ப்ளூ விமானத்தில் அதிர்ச்சி – இரு சடலங்கள் மீட்பு

east tamil

Leave a Comment