புதுக்குடியிருப்பு வெடிப்பு சம்பவத்தில் பெண் காயம்!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் இன்று மலை 5.30 மணிக்கு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 64 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

காணியில் இருந்த குப்பைகளை கூட்டி நெருப்பு வைத்த போது அதிலிருந்த குண்டு வெடித்தில் குறித்து அனர்த்தம் இடம்பெற்றுள்ளது

அம்மன் கோயில் வீதி, 5 ம் வட்டாரம் ,இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் 64 வயதுடைய பெண்ணே காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த பகுதியில் வேறு வெடிபொருட்கள் இருக்கிறதா என்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்