25.1 C
Jaffna
March 6, 2025
Pagetamil
சினிமா

‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு பாடலின் வீடியோ பாடல் இன்று வெளியீடு!

ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் படம் ‘முருங்கைகாய் சிப்ஸ்’ .

இதில் அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும், இதில் பாக்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி, எடிட்டராக ஜோமின் மேத்யூ, கலை இயக்குநராக நர்மதா வேணி, இசையமைப்பாளராக தரண் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. படத்தின் போஸ்டரில் 100 சதவீதம் நாட்டி, 100 சதவீதம் டேஸ்ட்டி என இடம்பெற்றிருப்பதால் அடல்ட் காமெடி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இதை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ட்ரெயலர் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் பார்வைகளை நெருங்கியது.

அதனைத்தொடர்ந்து இப்படத்தின் ஏதோ சொல்ல பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகியது . தரன் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது. பிறகு டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு என்ற இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியானது. விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடகி சிவாங்கி மற்றும் சூப்பர் சிங்கர் சாம் விஷால் இணைந்து பாடிய இந்தப் பாடல் யூட்யூபில் ட்ரண்டானது.

இந்நிலையில் டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு பாடலின் வீடியோ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக வெளிவந்த ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

Leave a Comment