பருத்தித்துறையில் மணமக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Date:

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் இடம்பெற்றதால் மணமக்கள் உள்ளிட்ட 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பருத்தித்றை பழவத்தை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார விதிமுறைகளை மீறியும், சுகாதார பிரிவினருக்கு அறிவிக்காமலும் திருமணம் இடம்பெற்றது.

இது குறித்து பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் ரொனால்ட் தலைமையில் சுகாதார துறையினர், பருத்தித்துறை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர்.

வெளிநாட்டிலிருந்து வந்த பழவத்தையை சேர்ந்த ஒருவருக்கும், கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

மணப்பெண் தரப்பினர் கிளிநொச்சியில் பொலிசாரிடம் திருமணத்தை குறிப்பிட்டு, 4 பேருக்கான பயண அனுமதியை பெற்று, பருத்தித்துறைக்கு வந்தனர்.

எனினும், பருத்தித்துறை திருமண நிகழ்வு அனுமதி பெறாமல் நடந்தது. வீட்டிலும், ஆலயத்திலும் சுகாதார விதிமுறைகளிற்கு புறம்பாக திருமணம் நடைபெற்றது தெரிய வந்தது. குருக்கள் முகக்கவசம் அணியாமல் சமயசடங்குகள் செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, நேற்று குருக்கள், புகைப்பட பிடிப்பாளர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இன்று மேலும் 8 பேர் இன்று தனிமைப்படுத்தப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அரச நிதி மோசடிச் சம்பவம் ஹக்கிங் அல்ல; போல ஆவணங்கள் மூலமான திருட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ,...

திருமண ஆசைகாட்டி தொழிலதிபரிடம ரூ.9 கோடி மோசடி: பிரபல நடிகை மீது வழக்கு!

திருமண ஆசை காட்​டி, ரூ.9.35 கோடி மோசடி செய்​த​தாக தெலுங்கு நடிகை...

ரிஷாட் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

வில்பத்து விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்