நேற்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பிறந்தநாள் கொண்டாடியதை அடுத்து அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கொரானா கட்டுப்பாடுகளை பின்பற்றி ஏழை எளிய மக்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும், அனாதை இல்லங்களுக்கும் உணவுகள், உடைகள் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஹோமியோபதி மருந்துகளும், நாட்டு மருந்துகளும் பொது மக்களுக்கு வழங்கினர்.மேலும் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, மளிகை சாமான்கள், பழங்கள், காய்கறிகள் வழங்கியும் மரக் கன்றுகளை கொடுத்தும், அதனை நட்டும் அனைத்து மாவட்டந்தோறும் ஜிவி பிரகாஷ் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.
மேலும் மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மருத்துவர்கள், காவல்துறையினர் போன்ற முன்களப்பணியாளர்களை பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களும், உடைகளும், மருத்துவ பொருட்களையும் வழங்க வைத்து முன்களப்பணியாளர்களை கவுரவப்படுத்தியுள்ளனர்.
தன் பிறந்தநாளை முன்னிட்டு இது போன்ற நற்செயல்களை தொடர்ந்து செய்து வரும் மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஜிவி பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார்.