இன்று ஜூன் 14ஆம் திதி உலக இரத்த தான நாள்.
ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் 6 லிட்டர் ரத்தம்இருப்பதாக மருத்துவ துறையில் கூறுகின்றனர். ரத்தத்தில் உள்ளஅணுக்கள் வெள்ளை அணுக்கள்,சிவப்பு அணுக்கள் என இரண்டு வகைப்படுகின்றன.
வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பாற்றலை பெருக்குவதற்குத் துணைபுரிகின்றன. சிவப்பு அணுக்கள், நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. ‘ஹீமோகுளோபின்’ எனப்படும் சத்துப் பொருள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவையெல்லாம் உடல் முழுவதும் சென்று நமக்குதேவையான ஆற்றலை தருகின்றன.
இரத்தத்தின் அளவு பல்வேறு காரணங்களால் குறைகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய இரும்புச் சத்து குறைதல் அல்லது உடம்பில் ‘அனீமிக்’ என்று சொல்லக்கூடிய இரத்தசோகை ஏற்படுதல், சத்தான உணவுகளை உண்ணாமல் இருத்தல், நம்முடைய சூழல் போன்றவற்றால் இரத்தத்தின் அளவு குறைகிறது. விபத்துகளாலும் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுகிறது.
இவ்வாறு பல்வேறு காரணங்களால் உடலில் ரத்த இழப்பு ஏற்படும்போது, பிறருடைய இரத்தத்தை எடுத்துக் கொடுப்பது மருத்துவமுறையாக உள்ளது. இதைத்தான் இரத்த தானம் என்கிறோம். 3 மாதங்களுக்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாம் இரத்த தானம் செய்யும்போது, நம் உடலுக்கும் அது நன்மை செய்கிறது. பொதுவாக இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகம்இருக்கும். அது நம் உடலில் கல்லீரல், இதயம் ஆகிய இடங்களில் படிந்து உடலுக்குச் சோர்வையும், துன்பத்தையும் தரும்.
இரத்த தானம் செய்யும்போது, இந்த அதிகப்படியான இரும்புச் சத்தும் இரத்தத்தோடு சேர்ந்து செல்வதால் இரும்புச் சத்து சமன்செய்யப்படுகிறது. மேலும் இரத்த தானமாக நாம் ஒரு யூனிட் கொடுத்தால் அதை 3 பேருக்குப் பயன்படுத்துவார்கள். சில சமயம் ஒருவருக்கேகூட பயன்படலாம். இதனால் யாரோ ஒருவருக்கு நாம் நன்மை செய்துள்ளோம் என்ற மனநிறைவு ஏற்படுகிறது.
இன்றைய நவீன உலகில் மருத்துவத் துறை பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளது. இரத்தத்தை ‘பிளாஸ்மா’, ‘ஹீமோகுளோபின்’ என பல வகையில் பிரிக்கின்றனர். இவ்வாறு இரத்தத்தின் உட்கூறுகளையும் பிரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் முறைகளையும் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் இரத்த தானம் என்பது மிகவும் பயனுடையதாக அமைகிறது.
ஒரு யூனிட் இரத்தம் கொடுத்தால், நம் உடலில் உள்ள 650 அளவு கலோரியை எரித்து விடுகிறது என்கின்றனர். இது இரத்த தானம் செய்வதால் நம் உடலுக்குக் கிடைக்கும் பயனாகும்.
எனவே, வாய்ப்பு உள்ளவர்கள், இரத்த தானம் வழங்க உடல் தகுதி உடையவர்கள் இரத்ததானம் செய்து நாமும் நலம் பெற்று, பிறர் நலமும் காப்போம்!




