விளையாட்டு

யூரோ கோப்பை – ஆஸ்திரியா, நெதர்லாந்து அணிகள் வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரியா, வட மாசிடோனியா அணிகள் மோதின.

முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலையில் இருந்தன.

இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியிம் இறுதியில் ஆஸ்திரியா வீரர்கள் 78, 89ம் நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். இறுதியில், ஆஸ்திரியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து, உக்ரைன் அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அனல் பறந்தது. 52 மற்றும் 58-வது நிமிடங்களில் நெதர்லாந்து வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 75 மற்றும் 79வது நிமிடங்களில் உக்ரைன் வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் சமனிலையில் முடியும் என எதிர்பார்த்தனர். ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் நெதர்லாந்து மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது.

இறுதியில், நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தி வெற்றி பெற்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

எல்.பி.எல் தொடரிலிருந்து நீக்கப்படுவதற்கு எதிராக யப்னா ஸ்டாலியன்ஸ் சட்ட நடவடிக்கை!

Pagetamil

கங்குலி, டிராவிட் உரையாடலை வெளிப்படுத்திய விவகாரம்: சஹாவிடம் விசாரணை நடத்தும் பிசிசிஐ

Pagetamil

உலக ஒலிம்பிக் தினம்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!