அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு -மக்களுக்கு அறிவுறுத்தல்

Date:

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை (15) நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட வௌவாலோடை, திராய்க்கேணி, அம்பாறை வீதி, ஹிலால்புரம், வங்கலாவடி, ஹிஜ்ராபுரம் வீதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (16) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட நிந்தவூர் 02ம் குறுக்கு தெரு பகுதியில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படும்.

வியாழக்கிழமை (17) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட நிந்தவூர் முஸ்தபாபுரம் பகுதியில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படும்.

சனிக்கிழமை (19) கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட தரவைக்கோவில், அம்மன்கோவில், பீச் வீதி, இஸ்லாமாவாத் வீட்டுத்திட்டம், உடையார் வீதி, கடற்கரைப்பள்ளி, வீவீ வீதி, வொலிவேரியன், கல்முனைக்குடி, ஒலுவில் கிராமம், நிந்தவூர், அட்டாளைச்சேனை, பாலமுனை, காரைதீவு ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படும்.

செவ்வாய்க்கிழமை (22) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட நிந்தவூர், வௌவாலோடை, திராய்க்கேணி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படும்.

புதன்கிழமை (23) கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட வைத்தியசாலை வீதி, மணல்சேனை, பாண்டிருப்பு, மருதமுனை, துறைவந்தியமடு,பெரிய நீலாவனை ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படும்.

வியாழக்கிழமை (24) கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட நாவிதன்வெளி, அண்ணாமலை ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படும்.

சனிக்கிழமை (26) நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட நிந்தவூர் 02ம் குறுக்குத்தெரு,அட்டாளைச்சேனை கோணவத்தை, ஜீ.ரீ.சி. தெற்கு, திராய்க்கேணி, சின்னப்பாலமுனை, சம்மாந்துறை அம்பாறை வீதி, ஹிலால்புரம், வங்கலாவடி, ஹிஜ்ராபுரம் ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (29) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட நிந்தவூர், வௌவாலோடை, திராய்க்கேணி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படும்.

புதன்கிழமை (30) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட ஒலுவல் கிராம் பகுதியில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்