ஒரு காலத்தில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு இடையே சுமார் 5 ஆண்டுகளாவது இடைவெளி இருக்கும். சில நேரங்களில் 10-15 ஆண்டுகள் இடைவெளியுடன் தம்பதிகளுக்கு திருமணம் நடப்பது அந்த காலங்களில் சாதாரண விஷயம் ஆனால் அந்த தம்பதிகளில் எல்லாம் ஆண்களுக்கு வயது அதிகமாக இருக்கும். பெண்ணிற்கு வயது குறைவாக இருக்கும். தன்னை விட அதிக வயதுடைய பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்வது என்பது அரிதான விஷயம் தான். மிக சில உதாரணங்களே இவ்வாறு தன்னை விட குறைவான வயதுடைய ஆண்களை திருமணம் செய்த பெண்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயதான குரான் என்ற இளைஞர் தன்னை விட 37 வயது அதிகமான அதாவது 60 வயதான பாட்டியை டேட்டிங் செய்து வருகிறார். ஆம் நீங்கள் வாசித்தது சரி தான் 60 வயதான பாட்டியைதான் 23 வயது இளைஞர் டேட்டிங் செய்து வருகிறார். அந்த 60 வயது பாட்டியின் பெயர் செரில்
இது குறித்து டிக்டாக்கில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அது யூடியூபிலும் வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் மக்களின் கேள்விக்கு பதிலளிக்கின்றனர். அதில் ஒருவர் இந்த டேட்டிங்கிற்கு உங்கள் குடும்பத்தினர் சம்மதித்து விட்டனரா என கேட்டார் அதற்கு அந்த 60 வயது பாட்டி செரில் கூறியபோது தனக்கு குரானை விட அதிக வயதான பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் இணைந்திருப்பது சந்தோஷம் தான். எங்களை போல வாழ அவர்கள் தற்போது முயன்று வருகிறார்கள் என கூறினார்.
பலர் இவர்களை கிண்டல் செய்து பதிவுகளை போட்டனர் அதற்கு இவர்கள் எந்த பதிலளையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் செரில் தோற்றம் வயதான சுறுங்கிய தோலை பலர் கிண்டல் செய்தனர். ஆனால் அவர்கள் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர்களது பாசிடிவாக மட்டுமே வெளிப்படுத்தி வருகின்றனர்.
தன்னைவிட 37 வயது அதிகமான பெண்ணை ஒரு இளைஞர் திருமணம் செய்திருப்பது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது