29.8 C
Jaffna
March 29, 2024
இந்தியா

2 பவுன் செயினுடன் மனு ; முதல்வரை நெகிழ வைத்த பட்டதாரி பெண்!

மேட்டூர் அணையை திறக்க சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பட்டதாரி பெண் கொடுத்த கோரிக்கை மனு நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 12ம் தேதி சேலத்திற்கு அரசு முறைப் பயணமாக சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையை திறந்து வைத்தார். அப்போது பொதுமக்கள் தரப்பில் முதல்வரிடம் மனுக்களை வழங்கினர். அதில் சௌமியா என்ற பெண் பட்டதாரி ஒருவர் கொரோனா நிதியாக தனது இரண்டு பவுன் தங்க சங்கிலியை இணைத்து கொடுத்த மனு கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த மனுவை கண்டு நெகிழ்ந்துபோனதாக முதல்வர் ஸ்டாலின் இளம்பெண்ணின் செயலை பாராட்டியது மட்டுமின்றி அதனை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்படி அந்த மனுவில் கூறப்பட்டிருப்பது என்ன என்பதை பார்க்கலாம்.” என்னிடம் பணம் இல்லாததால் கொரோனா நிதித்தொகையாக எனது கழுத்திலிருந்த 2 பவுன் செயினை நிதியாக கொடுக்க விரும்புகிறேன்”

ஐயா,

இரா. சௌமியா ஆகிய நான் BE. கம்ப்யூட்டர் சைன்ஸ் பட்டதாரி, எனது தந்தை ஒய்வு பெட்ரா பணியாளர். என்னுடன் பிறந்த மூத்த சகோதரிகள் இரண்டு பேர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. எனது தந்தை பணியில் இருந்து பெற்ற சம்பள தொகை அனைத்தையும் எங்களை படிக்க வைக்கவும், சகோதரிகளுக்கு திருமணம் செய்யவும் செலவு செய்துவிட்டார். நாங்கள் மூன்று பெண்களும் பட்டகாரிகள். ஆனால், வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

எனது தந்தை பணி ஒய்வு பெற்று வந்த சில மாதங்களில் என் அம்மாவுக்கு நிமோனியா காச்சல் ஏற்பட்டு நுரையீரல் பழுதடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். எனது தந்தை ஒய்வு பெற்ற சேமிப்பு தொகை அனைத்தையும் அம்மாவின் மருத்துவத்திற்காக செலவு செய்துவிட்டார். மருத்துவச்செலவு 13 லட்ச ஆகிவிட்டது. நாங்கள் வாடகை வீட்டில் உள்ளோம். எனது தந்தைக்கு ஒய்வு பணம் 7 ஆயிரம் வருகிறது. வீட்டு வாடகை ரூபாய் 3 ஆயிரம் போக 4 ஆயிரத்தை வயது குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம். எனக்கு அம்மாவாக இருந்து வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன். எனக்கு அரசு வேலை வேண்டும் என்றும் எதிர்பார்க்கவில்லை. எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால்கூட போதும்.

” இந்த வேலைவாய்ப்பை எனது தாய் மீண்டும் உயிர் பெற்று வந்ததாக தாய் அன்புடன் எதிர்பார்த்து காத்திருப்பேன்”

என இவ்வாறு சௌமியா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Image

Image

இந்த கடிதத்தை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ” மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.

பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என கூறியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள…” – சினிமா வசனம் பேசி விஜய பிரபாகரன் வாக்கு சேகரிப்பு

Pagetamil

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கேஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் விசாரிக்க அனுமதி

Pagetamil

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

Leave a Comment