மரம் முறிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த மூன்று இளைஞர்கள் படுகாயம்

Date:

மரமொன்றின் பாரிய கிளையொன்று பேருந்து தரிப்பிடத்தில் முறிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அட்டன் – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு அருகாமையில் உள்ள ஒஸ்போன் தோட்டத்திலேயே நேற்று (12) மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் நேற்று மாலை கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் மரமொன்றின் பாரிய கிளையொன்று முறிந்து பஸ்தரிப்பிடம் மீது விழுந்துள்ளது. பஸ் தரிப்படமும் முழுமையாக சேதமடைந்து, அதற்குள் இருந்த இளைஞர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

பிரதேச வாசிகள் இணைந்தே மூவரையும் மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

சீனாவில் காலணி தொழிற்சாலை தீவிபத்தில் 28 பேர் பலி

கிழக்கு சீனாவில் வியாழக்கிழமை ஒரு காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்...

பாலியல் குற்றச்சாட்டில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கைது!

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர...

அறிவுசார் சொத்துரிமையை மீறிய விமல் ரூ.10 இலட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவு

'இல்லை என்பதற்குப் பதிலாக உண்மை' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டதன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்