செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் ‘சாணிக் காயிதம்’ திரைப்படம் தியேட்டரில் வெளியான பிறகு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘ராக்கி’ படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’ திரைப்படம் உருவாக இருக்கிறது. ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் பயங்கர ஆயுதங்களுடன் கைதான வழிப்பறி கொள்ளையர்கள் போல காண்பிக்கப்பட்டிருந்தனர். அந்த போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக களம் இறங்குவதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் சாணிக் காயிதம் திரைப்படம் தியேட்டரில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தியேட்டரில் வெளியான பின்பு இந்தப் படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாம். சாணிக் காயிதம் படத்தின் ட்ரைலர் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.