தன் மூன்று வயது மகள் அரின் கதக் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அசின். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.
ஜெயம் ரவியின் எம். குமரன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்த அசின். அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கமல் ஹாசன் என்று பல பிரபல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தார். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தபோது கஜினி படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் அசின்.
இந்தி கஜினி சூப்பர் டூப்பர் ஹிட்டாகவே இனி பாலிவுட்டில் தான் இருப்பேன் என்று கூறி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் பாலிவுட்டில் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.
இந்நிலையில் மைக்ரோமேக்ஸ் துணை நிறுவனரான ராகுல் சர்மாவை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அசின் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.
அவ்வப்போது தன் செல்ல மகள் அரினின் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் 3 வயது அரின் கதக் கற்றுக்கொள்ளும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் அசின்.
அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்தியிருப்பதுடன், அரின் ரொம்ப க்யூட்டாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அம்மாவை போன்றே மகளும் டான்ஸராகிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.
அசின் மகளின் பெயர் அரின் ரயின். இரண்டுமே அசின் மற்றும் ராகுல் பெயரை சேர்த்து வைக்கப்பட்டது தான். இந்த விளகத்தை அரினின் மூன்றாவது பிறந்தநாளின்போது அளித்தார் அசின். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாத அவர், மகளின் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் மகள் வளர்ந்துவிட்டார் மீண்டும் நடிக்க வரலாம் அல்லவா என்று ரசிகர்கள் அசினிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.