வெலிகம, பொல்வதுமோதர கடலில் இன்று காலை கைப்பற்றப்பட்ட ரூ .1,758 மில்லியன் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருள், ஈரான் மற்றும் பாகிஸ்தான் எல்லையிலிருந்து அனுப்பப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.
டுபாயில் வசிக்கும் ஒரு இலங்கையரே இந்த கடத்தலின் பிரதான சூத்திரதாரியாவார்.
சம்பந்தப்பட்ட நபர் தொடர்பான மேலதிக விவரங்களை அறிய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 11 பேர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்பட்டு, ஏழு நாள் தடுப்பு உத்தரவு பெறப்படும் என்று பொலிசார் தெரிவித்தனர்.
219 கிலோ மற்றும் 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இன்றைய நடவடிக்கையின் போது மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1