உலகம் முழுவதும் பல விசித்திரமான சம்பவங்கள் இருக்கிறது. அப்படியான கலிஃப்போர்னியாவில் எரியும் மரம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. பொதுமாக மரம் முழுவதும் எரிகிறது என்றால் இடி விழுந்து எரியும், அப்படி ஒரு மரம் எரிந்தது என்றால் 2-3 நாட்கள் எரியும். ஆனால் கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன்பு கலிஃபோர்னியாவில் உள்ள காட்டில் தீபற்றி எரிந்த மரம் ஒன்று இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. அது பற்றி முமுமையாக காணலாம் வாருங்கள்.
2020ம் ஆண்டு துவக்கத்தில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் உள்ள தீடீரென தீபிடித்தது பல்லாயிரக்கணக்கான மரங்கள் தீ பிடித்து ஏரிந்தன. சுமார் 1.5 லட்சம் ஏக்கர் காடுகள் தீக்கிறையாகின. தீ எல்லாம் பெரும்பாலும் அணைக்கப்பட்ட பின்பு அப்பகுதியில் உள்ள வனத்துறை அதிகாரிகள் காடுகளில் அழிந்த / சேதமான மரங்களை பற்றியும் விலங்குகள் பற்றியும் கணக்கெடுப்பதற்காக காட்டிற்குள் சென்றனர்.
அப்பொழுது அங்கிருந்த சிக்குவா மரம் ஒன்றிலிருந்து மேல் பகுதி வழியாக மிகப்பெரிய அளவில் புகை ஒன்று கிளப்பி வான்நோக்கி சென்று கொண்டிருந்தது. அதை அவர்களால் நம்பவே முடியவில்லை. இதையடுத்து அந்த மரத்தை பார்க்க அவர்கள் வெகு தொலைவிருந்து லென்ஸ் ஒன்றை பயன்படுத்தி பார்த்தனர். அப்பொழுது அது மிகவும் பழைய மரம் என்பது தெரியவந்தது. காட்டு தீ அனைத்தும் அனைந்துவிட்ட போதிலும் இந்த மரம் மட்டும் உட்புறமாக கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.
இந்த தீ இன்னும் சில தினங்களில் எரிந்து நின்று விடும் என்று தான் நினைத்து அவர்கள் அடுத்த பணியை பார்க்க துவங்கினர். ஆனால் இவர்கள் பல நாட்களாக அப்பகுதியில் பணியிலிருந்தும் அந்த மரம் மட்டும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. இதையடுத்து விஞ்ஞானிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் நடத்திய ஆய்வில் அந்த மரம் உட்புறமாக எரிவதால் வெளிபுறத்தில் உள்ள காற்று தீ வேகமாக எரிய பயன்படவில்லை. அதே நேரத்தில் வெளிபுறம் பணி பெய்தால் தீ எரியும் அளவு குறைகிறது. ஆனால் அணையவில்லை, இந்த மரம் பெரிய மரமாக இருக்கும் அதே வேளையில் இந்த மரம் மிக மெதுவாக எரிவதால் பல நாட்களாக எரிவதாக விஞ்ஞானிகள் கூறினர்.
இந்த மரம் எரிவதால் ஒரு வித நன்மையும் இருக்கிறதாம். இந்த மரம் உட்புறமாக எரிந்து கொண்டிருந்தாலும் வெளிப்புறமாக பசுமையாக இருக்கிறதாம். எப்பொழுதெல்லாம் நெருப்பு அதிகமாக கிளைகளை தாக்க வருகிறதோ அப்பொழுது எல்லாம் அப்பகுதியில் உள்ள பனி உருகி கிளையை காப்பாற்றி அதில் உள்ள விதை களை கீழே தள்ளுகிறதாம். அதனால் அப்பகுதியில் இதே போல அதிகமான மரங்கள் வரக்கூடும் என தெரகிறது.
விஞ்ஞானிகள் பலர் இவ்வாறு மரம் எரிந்து கொண்டே இருப்பது ஆபத்து என்றும், என்று அதிக காற்று வீசுகிறோ அன்று இந்த மரத்தின் தீ பக்கத்து மரங்களுக்கு பரவி மீண்டும் காட்டு தீ ஏற்படுவதற்கு காரணமாகிவிடும் என கூறுகின்றனர். ஒரு மரம் சுமார் 1.5 ஆண்டுகளாக எரிந்து கொண்டே இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்க நம்ப வில்லை என்றாலும் அதான் நிஜம்.