கனடாவிற்கு செல்வதற்காக கர்நாடகாவில் பதுங்கியிருந்த 38 இலங்கையர் கைது!

Date:

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மங்களூர் நகரில், கனடா கனவுடன் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூர் நகரிலுள்ள 3 வெவ்வேறு விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கனடாவிற்கு வேலை வாய்ப்பிற்காக அனுப்பப்படுவதாக கூறி, இவர்கள் இலங்கையிலிருந்து அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

நகர காவல்துறை ஆணையாளர் என்.சசிக்குமார் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி 38 இலங்கையர்களும் தூத்துக்குடி வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர்.

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக இலங்கையின் வடமாகணத்தில் உள்ள முகவர் ஒருவர் இந்த மனித கடத்தலை ஏற்பாடு செய்துள்ளார். ஒவ்வொருவரும் இலங்கை பணத்தில் 6- 10 இலட்சம் ரூபாய்களை முகவருக்கு கொடுத்துள்ளனர்.

தூத்துக்குடி ஊடாக தமிழகத்திற்குள் நுழைந்து மதுரை, சேலத்தில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்தனர். தமிழக தேர்தலையொட்டி விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டதால் அவர்கள் பெங்களூர், சாந்தி நகருக்கு மாற்றப்பட்டனர். பின்னர் சிறிய குழுக்களாக மங்களுர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் தம்மை மீனவர்களாகவும், நகரில் தொழிலாளர்களாகவும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தமிழக பொலிசார் வழங்கிய உளவுத் தகவல்தொடர்பாக மங்களூரு பொலிசார் நடவடிக்கை எடுத்தனர்.

கைதான இலங்கையர்களிற்கு உணவு விநியோகம் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றிய மேலும் ஏழு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் மனித கடத்தல், பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடி தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனித கடத்தல் தொடர்பாக இலங்கை வெளியுறவு அதிகாரிகள் பொலிசாருடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

தமிழத்தில் தங்கியிருந்த பின்னர், கனடாவிற்கு கொள்கலன் கப்பல்கள் அல்லது சரக்கு கப்பல்கள் அல்லது தனியார் கப்பல்கள் வழியாக செல்லலாமென அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த வகையில் கனடா சென்றவர்களை அவர்கள் அறிந்திருந்த பின்னரே இந்த பயணத்தில் இணைந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் வட இலங்கையை சேர்ந்தவர்கள். இவர்களது குழுவில் 65- 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இருந்ததாகவும், அவர் பின்னர் திரும்பி சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“தமிழக போலீசார் ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர், மேலும் அவர்கள் 40 பேரை தடுத்து வைத்துள்ளனர்“ என நகர பொலிஸ் ஆணையாளர் சசிகுமார் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” – எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பாடகரான எஸ்.ஜானகி மறைவுக்கு முன்னாள் முதல்வரும் திமுக...

திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி மறைவு

இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88....

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்