முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் நேற்று வியாழக்கிழமை மன்னார் வங்காலை மற்றும் சிலாபத்துறை கடற்கரையில் கரையொதுங்கியன.
இந்த நிலையில் அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் கடற்கரையோரங்கள் முழுவதிலும் காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இதனை பிரதேச மக்களும், மீனவர்களும் அவதானித்து,உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த பகுதியிலும் கடற்கரையிலும் சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் கடற்கரையேரங்கள் முழுவதிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து இரசாயனங்கள் வெளியேறியதை தொடர்ந்து, பெருமளவு கடலுயிர்கள் இறந்து அண்மைய நாட்களில் கரையொதுங்கியது குறிப்பிடத்தக்கது.