கிளிநொச்சியில் தொடர்ந்தும் விதி முறைகளை மீறிய கிரவல் அகழ்வு

Date:

கிளிநொச்சி முறிகண்டி அக்கராயன் வீதியில் நான்காம் கட்டை மற்றும் அதனை அண்டிய காடுகளில் தொடர்ந்தும் விதி முறைகளை மீறிய கிரவல் அகழ்வு இடம்பெற்று வருகிறது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கிரவல் அகழ்வதற்கான அனுமதியினை பெற்று கிரவல் அகழ்வில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால் இவர்கள் கிரவல் அகழ்விற்கு அனுமதி வழங்கப்படுகின்றபோது உரிய திணைக்களங்களால் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டே கிரவல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அந்த விதி முறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அனுமதி வழங்கப்படுகின்ற போது கிரவல் அகழும் நேரம், அகழப்படும் பரப்பளவு, எவ்வளவு ஆழத்திற்கு அகழப்பட வேண்டும், பெறுமதி மிக்க பெரிய காட்டு மரங்கள் அழிக்கப்படக் கூடாது, மற்றும் அளவு உள்ளிட்ட விதி முறைகள் குறிப்பிடப்பட்டே கிரவல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

ஆனால் அனுமதியினை பெற்றவர்கள் இதனை முறையாக பின்பற்றுவதில்லை எனவும், அனுமதியினை வழங்கிய திணைக்களங்கள் குறித்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதனை கண்காணிப்பது இல்லை எனவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனவே இந்த விதி முறைகள் மீறப்படுவதனால் காடுகள் கண்டப்படி அழிக்கப்பட்டு வருகிறது எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்