வாளை வாயில் வைத்து ரிக்ரொக்: கைதான யாழ் இளைஞனிற்கு கடைசியில் நடந்தது இதுதான்!

Date:

வாயில் வாளை வைத்து ரிக்ரொக் வீடியோ வெளியிட்ட இளைஞன், பொலிசாரால் அறிவுரை கூறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர், நேற்று முன்தினம், கோப்பாய் பொலிவாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் வாயில் வாள் வைத்து ரிக்ரொக் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ பொலிசாரின் கவனத்திற்கு சென்றதையடுத்து, கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் வாள்வெட்டு குழு உறுப்பினராக இருக்கலாமென்ற சந்தேகத்திலேயே கைது செய்யப்பட்டார்.

எனினும், ஆலயத்தின் வாளொன்றையே வாயில் வைத்து ரிக்ரொக் வீடியோ எடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.

ஆலய பூசகரும் பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலமளித்தார். ஆலயத்தை கழுவ வரும் இளைஞர்களிடம் வாளையும் கழுவும்படி வழங்கியதாகவும், அப்போது ஒரு இளைஞன் ரிக்கொக் வீடியோ பதிவு செய்திருக்கலாமென கூறினார்.

இளைஞனிற்கு வாள்வெட்டு குழுவுடன் தொடர்பில்லையென்பது உறுதியானதும், அவர் அறிவுரை கூறி விடுவிக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்

நாடளாவிய ரீதியில் மீண்டும்   சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால்  அம்பாறை...

உக்ரைன் விவகாரத்தில் புதின் நியாயமாகவே நடந்து கொள்கிறார்: ட்ரம்ப் பாராட்டு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, ரஷ்யா "உக்ரைன் விவகாரத்தில் சரியாகவே...

கள்ளக்காதலை பெருமையடித்து திரிந்த செந்தூரன்: கடுப்பான கணவனின் விபரீத முடிவு!

நுரைச்சோலை, கரம்ப கார்மென்ட் வத்த பகுதியில், முறையற்ற உறவு தொடர்பான மோதல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்