அனைத்து மக்களிற்கும் தடுப்பூசி கிடைக்கும் வரை நான் செலுத்த மாட்டேன்!

Date:

கொவிட் -19 தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாத காரணத்தினாலேயே எனக்கும் எனது பாரியாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஆனால் நாட்டு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றிமுடிக்கும் வரையில் நான் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மாட்டேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பாரியாரும் குணமடைந்து நேற்று வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கங்காராம விகாரைக்கு வழிபடச் சென்றிருந்த எதிர்க்கட்சி தலைவர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியிருந்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் வைரஸ் தாக்கத்தினால் நாம் நாடாக வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்த சவால்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். நாம் அனைவரும் இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும். சகல மக்களும் ஒன்றிணைந்து இதற்கான முயற்சிகளை கையாள வேண்டும்.

கொவிட் -19 வைரஸ் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாது நிராகரித்தமையே எனக்கும் எனது மனைவிக்கும் கொவிட் தொற்று ஏற்படக் காரணமாகும். ஆனால் நாம் ஏன் தடுப்பூசியை நிராகரித்தோம் என்றால், நாம் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முன்னர் நாட்டு மக்கள் சகலருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவாகும்.

இந்த தெளிவான கொள்கையில் இருந்து நான் மீண்டும் கூறிக்கொள்வது ஒன்றுதான். இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்