26.8 C
Jaffna
January 21, 2022
முக்கியச் செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பிளாஸ்டிக் கழிவுகள் மன்னாரிலும் கரையொதுங்கின!

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து கடலில் விழுந்த ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று வியாழக்கிழமை (10) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையேரங்கள் முழுவதிலும் சிதறிக் கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன் குறித்த பகுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக சென்று கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் தொடர்பாக பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் அரிப்பு பகுதியிலும் குறித்த பிளாஸ்ரிக் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

பிளாஸ்ரிக் தயாரிப்பிற்கான சிறிய உருண்டைகள் கப்பலில் இருந்து கடலில் கொட்டப்பட்டு, நீர்கொழும்பை அண்டிய பகுதிகளில் கரையொதுங்கியது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மீண்டும் வடமாகாணசபை தேர்தலில் களமிறங்க தயார்: க.வி.விக்னேஸ்வரன் அதிரடி அறிவிப்பு!

Pagetamil

தமிழ் தேசிய கூட்டமைப்பு- தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர்கள் கலந்துரையாடல்!

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டை உடைக்கும் சூழ்ச்சியே சம்பந்தனின் முயற்சி: சாடுகிறார் சுரேஷ்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!