நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பராக இருக்கும் நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் ரீமேக்கான இப்படத்தை, ‘அவள்’ படத்தின் இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். நயன்தாராவுக்கு ஜோடியாக அஜ்மல் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ள இப்படத்தை நயன்தாராவின் சொந்த நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் பிரொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு, கொரானா அச்சுறுத்தல் காரணமாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘நெற்றிக்கண்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிளை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ‘இதுவும் கடந்து போகும்’ என்று தொடங்கும் இந்த மெலோடி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடலை சோனி மியூசிக் வெளியிட்டுள்ளது.