தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிற்கு நிவாரண பொதி: 1,000 ரூபா மரக்கறியை காணோம்!

Date:

கொவிட் 19 காரணமாக தனிமைப்படுத்தப்படுகின்ற குடும்பங்களுக்கு அரசினால் கூட்டுறவு அமைப்புக்கள் மூலம் வழங்கப்படுகின்ற 10 ஆயிரம் ரூபா பெறுமதியான
உணவுப் பொதிகளில் மரக்கறிக்கு என ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள போதும் பொது மக்களுக்கு அந்த பெறுமதியில் மரக்கறிகள் வழங்கப்படுவதில்லை என
பொதிகளை பெற்றுக்கொண்ட பல குடும்பங்கள் கவலை தெரிவித்துள்ளன.

கிராமங்களில் கொவிட் 19 காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் விபரங்கள் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த கூட்டுறவு அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் ஊடாக 10,000 ரூபா உலருணவுப் பொதி வழங்கப்படுகிறது. இந்த
பொதியில் அரிசி, மா,சீனி,பருப்பு,உப்பு, தேயிலை என 15 அத்தியாவசியப் பொருட்கள் அடங்குகின்றன. இதில் மரக்கறிக்கு 1000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலும் வழங்கப்படுகின்ற பொதிகளில் இரண்டு கிலோவுக்குட்பட்ட பெரிய வெங்காயம், உருளை கிழக்கு மற்றும் பூசணிக்காய் என்பனவே வழங்கப்படுகின்றன. இவற்றுக்கே ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கும் பொது மக்கள் இவற்றின் பெறுமதி ஆயிரம் அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலாளர் ப.ஜெயகாரன் அவர்களிடம் தொடர்பு கொண்டு வினவிய போது கூட்டுறவு அமைப்புக்கள் ஊடாக வழங்கப்படுகின்ற
பொதியில் பொருட்கள் உரிய விலையிலும் தரத்திலும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அவ்வாறு உரிய விலைக்கும் தரத்திற்கும் பொருட்கள் வழங்கப்படவில்லை எனில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்