இந்த லாக்டவுன் நாட்கள் தன் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது குறித்து நடிகை பார்வதி நாயர் மனம் திறந்துள்ளார்.
லாக்டவுன் காலங்களில் மக்கள் தங்கள் குடும்பங்களுடன் நேரத்தை செலவிட்டு வருவதைப் போலவே, திரைத்துறை பிரபலங்களும் தங்கள் நேரத்தை குடும்பத்தினருடன் செலவிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் செடிகள் வளர்ப்பது, உடற்பயிற்சி செய்வது, புத்தகங்கள் படிப்பது என பயனுள்ள வகையிலும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். தற்போது நடிகை பார்வதி நாயர் லாக்டவுன் தனக்கு மிகச் சிறிய நிகழ்வுகளையும் ரசிக்கக் கற்றுக்கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“நான் தற்போது தான் ஏராளமான படங்களைப் பார்த்து வருகிறேன். திரைப்படத் தயாரிப்பைப் பற்றிய எனது பார்வை மாறிவிட்டது. நான் முன்பு காணத் தவறிய திரைப்படங்களின் தொழில்நுட்ப மற்றும் அழகியல் அம்சங்களைப் பார்த்து தற்போது பாராட்டி வருகிறேன். கதை ஓட்டத்தின் கணிப்பு மற்றும் திரைக்கதையை பகுப்பாய்வு செய்தல் மற்றும் உரையாடல்கள் கூட நான் மிகுந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவையாக மாறியுள்ளன.
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க வேண்டியதன் அவசியத்தை லாக்டவுன் நமக்குக் கற்றுக் கொடுத்துருக்கிறது. இயல்புநிலை திரும்பியதும், மிகச்சிறிய நினைவுகளைக் மகிழ்விப்பதை நான் உறுதி செய்வேன். நாங்கள் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறோம், நிகழ்காலத்தை புறக்கணிக்கிறோம். நிகழ்காலத்தில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.