கொரானா அச்சுறுத்தல் நிலவி வரும் மலையாள நடிகை பார்வதி நாயர் இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் பார்வதி நாயர், தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு ‘உத்தம வில்லன்’, ‘என்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’, ‘மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வைபவ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆலம்பனா’ படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே கொரானா 2வது அலையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும் மூன்றாவது அலையின் அச்சம் இப்போதே தொடங்கிவிட்டது. மூன்றாவது அலை மிகவும் கொடூரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
இதனால் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் பொதுமக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதேபோன்று சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல மலையாள நடிகை பார்வதி நாயர் தனது முதல் டோஸ் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதை சமூக வலைத்தளத்திலும் புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.