தன்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிககை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அவரைப் பற்றி அவமதிக்கும் கருத்துக்கள் சில சமூக ஊடகங்களில் சமீபத்திய நாட்களில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
தனிமைப்படுத்தலுக்காக பசறைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு குழுவினரை திரும்பி வருமாறு அழைக்கவில்லையென கூறினார்.




