ஹீல்ஸ் காலணி அணிந்து கொண்டு புட்பால்(foot ball) விளையாடிய 14வயது சிறுமி!

Date:

பெண்கள் ஹீல்ஸ் அணிந்து நடப்பதே சற்று சிரமமான விஷயம் தான். மேடுபள்ளம் இருக்கும் இடங்களில் ஹீல் அணிந்து நடந்தால் பல பெண்கள் கீழே விழுந்துவிடுவார்கள். ஹீல்ஸ் பெண்களை உயரமாக காட்ட உருவாக்கப்பட்ட காலணி, இந்நிலையில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவர் ஹீல்ஸ் காலணியை அணிந்து கொண்டே ஃபுட் பால் உதைத்து விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கமான Cindy Remruatpuii என்ற பக்கத்தில் வெளியிட்ட அந்த வீடியோவில் அவர் வீட்டிற்குள்ளேயே இருந்து கருப்பு நிற ஹீல்ஸ் செருப்பை அணிந்து கொண்டு ஃபுட்பாலை தன் காலால் எட்டி உதைத்து விளையாடுகிறார். வெறும் காலால் ஃபுட்பாலை இவ்வாறு விளையாடுவதே சிரமம். ஃபுட்பால் பிளேயர்களால் மட்டுமே இப்படி விளையாட முடியும். சிண்டியும் ஒரு ஃபுட்பால் பிளேயர் என்பதால் இதை எளிதாக விளையாடியுள்ளார். சிண்டி ஃபுட்பால் விளையாடும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதை அம்மாநில விளையாட்டு துறை அமைச்சர் ராபர்ட் ரோம்வியா ரோடே என்பவர் தனது ட்விர்கள் பக்கத்தில் பதிவு செய்து அந்த பெண்ணை பாராட்டியுள்ளார். ஃபுட்பால் விளையாட்டு ஆண்களுக்கு மட்டுமல்ல அது அனைவருக்குமானது என குறிப்பிட்டுள்ளார்.இந்த முயற்சியை கடந்தாண்டு டிரெண்டான Keepy-Uppy Challengeக்காக செய்யப்பட்டது என்றும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற நோக்கில் செய்ததாக அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

2026 உயர்தர பரீட்சைக்கு அடையாள அட்டை கட்டாயம்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்