ஆடைத் தொழிற்சாலை பேருந்துகளை திருப்பியனுப்பிய மக்கள்: 3 பேர் கைது!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா அதிகரிக்க காரணமாக இருந்த புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை மக்களின் எதிர்ப்புக்கு க்கு மத்தியில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று காலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த பேருந்தை மறித்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட பத்து பேர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளை சுதந்திரம் பகுதியில் மக்கள் தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் பேருந்துகளை திருப்பி அனுப்பிய மூன்று பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பல்வேறு எதிர்ப்புக்கு க்கு மத்தியில் இன்று புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் மிக குறைவான ஊழியர்களே பணிக்கு சமூகமளித்துள்ளதாக தெரியவருகிறது.

ஆடைத் தொழிற்சாலையை மூட எடுத்த முயற்சிகள் பயனளிக்காத நிலையில், ஊழியர்களை கடமைக்கு செல்லாமல் தவிர்க்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

2026 உயர்தர பரீட்சைக்கு அடையாள அட்டை கட்டாயம்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்