தடுப்பூசி திட்டத்தை இன்று முதல் நாட்டின் மேலும் பல மாவட்டங்களுக்கும் அரசாங்கம் விரிவுபடுத்துகிறது.
கோவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர், ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கையில், மாத்தளை, நுவரெலியா, கேகாலை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னருவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று காலை தடுப்பூசி வழங்க ஆரம்பிக்கப்படும் என்றார்.
சீனாவின் தயாரிப்பான சினோஃபார்ம் தடுப்பூசி இந்த மாவட்டங்களில் செலுத்தப்படும்.
அதிக ஆபத்துள்ள கிராம சேவகர் பகுதிகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கம் முதலில் தொடங்கும் என்று இராணுவ தளபதி கூறினார்.




