மன்னாரில் வாய்க்காலுக்குள்ளிருந்து கசிப்பு வடித்தவர் சிக்கினார்!

Date:

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வட்டுப்பித்தான் மடு பகுதியில் உள்ள விவசாய நீர் பாயும் வாய்க்கால் பகுதியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (8) காலை மன்னார் மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளதோடு குறித்த நபரிடம் இருந்து கசிப்பு மற்றும் கசிப்பு வடிக்கும் உபகரணங்களையும் மீட்டுள்ளன.

வட்டுப்பித்தான் மடு பகுதியில் உள்ள விவசாய நீர் பாயும் வாய்க்கால் பகுதியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் நடவடிக்கை இடம் பெற்று வருவதாக மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த பகுதியில் நபர் ஒருவர் சட்ட விரோதமாக கசிப்பு வடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், குறித்த நபரை மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.

குறித்த நபரிடம் இருந்து விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 20 லீற்றர் கசிப்பு, மற்றும் கசிப்பு வடிக்க தேவையான உபகரணங்கள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரனைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதோடு, மீட்கப்பட்ட கசிப்பு மற்றும் ஏனைய பொருட்கள் மன்னார் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வன்முறை முறைப்பாடுகளை கையாள வடக்கு பொலிஸாருக்கு தமிழில் விசேட பயிற்சி

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான...

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்