இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த மகாத்மா காந்தியின் பேத்தி பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள நிலையில் அவருக்கு தென்னாப்பரிக்க நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த தேசப்பிதா என போற்றப்படுபவர் மகாத்மா காந்தி.
பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகளும் காந்தியின் பேத்தியான ஆஷிஷ் லாதா ராம்கோபின். இவருக்கு வயது 56.
போலி ஆவணங்களை தயாரித்து இந்தியாவிலிருந்து சுங்க வரி இல்லாமல் சரக்கை இறக்குமதி செய்து தருவதாக தொழிலதிபர் தொழிலதிபரிடம் கூறியுள்ளார்.
இதற்காக மகராஜ் என்ற தொழிலதிபரிடம் இருந்து சுமார் 6 மில்லியன் தென் ஆப்பரிக்க ரேண்ட் பெற்று ( இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாய்) வாங்கி பின்னர் ஏமாற்றியுள்ளார் என டர்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மேல்முறையீடு செய்ய முடியாத படி தற்போது 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.