‘சூர்யா 40’ படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இயக்குனர் பாண்டியராஜ் வெளியிட்டுள்ளார்.
சூர்யாவின் 40வது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாண்டியராஜ் இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இவர்களுடன் சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இந்த படத்தின் ஷூட்டிங் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கொரானா காரணமாக தற்போது ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் பாரண்டியராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சூர்யா 40’ குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 35% படம் முடிஞ்சுருக்கு . எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு . அடுத்த ஷெடியூல் லாக்டவுன் முடிஞ்சதும் ஸ்டார்ட் பண்ண வேண்டயதுதான். எங்களுடைய படக்குழு தயாராக உள்ளது. டைட்டிலின் மாஸான அறிவிப்பு விரைவில் வெளியாகும். தயவு செய்து ஜூலை வரை நேரம் கொடுங்க என குறிப்பிட்டுள்ளார்.